உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தற்செயல் விடுப்பு போராட்டம்; ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

தற்செயல் விடுப்பு போராட்டம்; ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

கடலுார்; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 25ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதுகுறித்து சங்கத்தின் மூத்த இணை செயலாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளை களைதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. பழைய ஓய்வூதியம் குறித்து முந்தைய அரசு இரண்டு குழுக்கள் அமைத்து கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போதயை அரசு மூன்றாவது முறையாக குழு அமைத்து ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது. இதைக்கண்டித்தும், எங்களது பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், வரும் 25ம் தேதி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை