உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இளம்பெண் தற்கொலை; கணவர், மாமியார் கைது

இளம்பெண் தற்கொலை; கணவர், மாமியார் கைது

நெய்வேலி : நெய்வேலி அடுத்த சின்னகாப்பான்குளத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் பாண்டியன்,28; என்.எல்.சி., அனல் மின் நிலையத்தில், தனியார் நிறுவன செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்த நாகராஜன் மகள் நந்தினி,26; என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் பாண்டியன் மற்றும் அவரது தாய் செல்வி ஆகியோர், வரதட்சணை கேட்டு நந்தினியை துன்புறுத்தி வந்தனர்.இதனால், விரக்தியடைந்த நந்தினி நேற்று முன்தினம் வீட்டு தோட்டத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.நந்தினியின் சகோதரர் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில், தெர்மல் போலீசார் வழக்கு பதிந்து, பாண்டியன் மற்றும் செல்வியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி