உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வயிற்று போக்கில் சிறுமி பலி

வயிற்று போக்கில் சிறுமி பலி

மரக்காணம் : வயிற்று போக்கில் சிறுமிஇறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மரக்காணம் அடுத்த அனுமந்தையை சேர்ந்த ராதாகிருஷ்ணன்- ரதிதேவி தம்பதியின் மகள் ரத்திகா, 5; இவருக்கு நேற்று காலை வயிற்று போக்கு ஏற்பட்டது.உடன் அவரை அனுமந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், பின்னர் மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு டாக்டர்கள், சிறுமிக்கு ஊசி போட்டுவிட்டு வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறினர்.சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற பின் மீண்டும் வயிற்று போக்கு ஏற்பட்டது. அதனால், அவரை மீண்டும் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சற்று நேரத்தில் சிறுமி இறந்துவிட்டதாக கூறினர்.ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் சரியான முறையில் சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.தகவலறிந்த மரக்காணம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று,சிறுமியின் பெற்றோரிடம் புகார் கொடுக்குமாறு கூறினர். மேலும், சிறுமியின் உடலை கைப்பற்ளறி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை