உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மீன் குட்டையில் விழுந்த சிறுமி உயிரிழப்பு 

மீன் குட்டையில் விழுந்த சிறுமி உயிரிழப்பு 

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே சிறுமி, மீன் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணம் ஓடைத் தெருவை சேர்ந்த பாண்டியன் மகள் பூஜிதா, 8; அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம், சக சிறுமிகளுடன் இயற்கை உபாதைக்காக அருகே உள்ள மீன்குட்டையில் கால் கழுவ சென்றவர் தவறி குளத்தில் விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, சிறுமி உயிரிழந்தார்.சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ