உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி கள்ளச்சாராய பலியை முந்தியது கள்ளக்குறிச்சி சம்பவம்

பண்ருட்டி கள்ளச்சாராய பலியை முந்தியது கள்ளக்குறிச்சி சம்பவம்

கடலுார்: பண்ருட்டியில், 2001ம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 53 பேர் பலியான நிலையில், தற்போது அந்து மிஞ்சும் அளவில் , கள்ளக்குறிச்சியில் 55 பேர் பலியாகி, தமிழகத்தில் மிகப்பெரிய துயர சம்பவமாக மாறியுள்ளது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே நத்தம் அருங்குணம் கிராமத்தில், கடந்த 2001ம் ஆண்டு, கள்ளச்சாராயம் குடித்து, 53 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் கண் பார்வை இழந்தனர். இது, தமிழகத்தல் பெரிய துயர சம்பவமாக பார்க்கப்பட்டது. அதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர், செங்கல்பட்டில் 8 பேர் இறந்தனர்.இந்நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு, பண்ருட்டி கள்ளச்சாராய சம்பவத்தை மிஞ்சும் அளவில், தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 100க்கு மேற்பட்டோர் கண் பார்வை இழந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ