உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்தக கண்காட்சி நடத்தும் ஒரே பொதுத்துறை நிறுவனம் என்.எல்.சி.,: புதுச்சேரி சட்டத்துறை செயலர் புகழாரம்

புத்தக கண்காட்சி நடத்தும் ஒரே பொதுத்துறை நிறுவனம் என்.எல்.சி.,: புதுச்சேரி சட்டத்துறை செயலர் புகழாரம்

நெய்வேலி: இந்திய அளவில் புத்தக கண்காட்சி நடத்தி வரும் ஒரே பொதுத்துறை நிறுவனம் என்.எல்.சி.,மட்டுமே என, புதுச்சேரி சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி பேசினார்.நெய்வேலி புத்தகக் கண்காட்சி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி தலைமை தாங்கினார். புத்தகக் கண்காட்சியின் செயலர் ஹேமந்த்குமார் வரவேற்றார். என்.எல்.சி., இயக்குனர்கள் சமீர் ஸ்வருப், வெங்கடாசலம், விஜிலென்ஸ் துறையின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர்.சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசுகையில், பண்டைய காலங்களில் முனிவர்கள் ஞானம் பெறவும், கடவுளின் அருள் பெறவும் வேள்விகள் செய்ததாகவும், அப்போது அசுரர்களால் வேள்விக்கு தடங்கள் ஏற்படாமல் இருக்க, இறைவன் அவர்களைக் காத்ததாக கூறுகின்றனர். அந்த வகையில், தற்போது, மாணவர்களை மொபைல் போன்கள் மற்றும் செயலிகளின் தாக்கத்திலிருந்து காத்திட, இந்த புத்தகக் கண்காட்சி உதவியிருப்பதாக தெரிவித்தார்.முதன்மை விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி பேசுகையில், நாட்டில், 2021ம் ஆண்டின் கணக்குப்படி 365 பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளது. இவற்றில், பொதுமக்கள், மாணவ மாணவியர் பயன்படும் வகையில், புத்தக கண்காட்சி நடத்தி வரும் ஒரே நிறுவனம் என்.எல்.சி., மட்டுமே. அந்த வகையில் இந்நிறுவனம் மற்ற அனைத்து நிறுவனங்களையும் விட தனித்துவம் பெறுகிறது என்றார்.புத்தகக் கண்காட்சியில், சிறந்த எழுத்தாளராக உமா மோகன் கவுரவிக்கப்பட்டார். ராஜசேகர் எழுதிய 'நினைவுகளின் தொகுப்பு' என்ற நூல் வெளியிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை