உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோழியூர் அத்திப்பட்டி மக்களுக்கு தனிப்பட்டா திட்டக்குடி நகராட்சி கவுன்சிலர் கோரிக்கை

கோழியூர் அத்திப்பட்டி மக்களுக்கு தனிப்பட்டா திட்டக்குடி நகராட்சி கவுன்சிலர் கோரிக்கை

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கோழியூர், அத்திப்பட்டி பகுதி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என நகராட்சி கவுன்சிலர் செமிளாதேவி சின்னு கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது, திட்டக்குடி நகராட்சி கோழியூர் 8வது வார்டில் உள்ள அத்திப்பட்டி பகுதியில் எழுபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகட்டி வசித்து வருகின்றனர். கடந்த 1992ம் ஆண்டு 242பேருக்கு, இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை அளந்து சப்டிவிஷன் செய்து தராததால் அப்பகுதி மக்கள் தனிப்பட்டா பெற முடியாமல் தவிக்கின்றனர்.பட்டா பெற்றவர்களின் குடும்பமும் பெருகிவிட்டதால், இடப்பற்றாக்குறை ஏற்பட்டு ஒரே வீட்டில் மூன்று, நான்கு குடும்பத்தினர் வசிக்கும் அவலநிலை உள்ளது. இப்பிரச்சினைக்கு கடலுார் மாவட்ட கலெக்டர் உடனடி தீர்வு காணவேண்டும். மேலும், அத்திப்பட்டி பகுதி மக்களுக்கு சாலைவசதி, குடிநீர்வசதி, தெருவிளக்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும். இது உள்பகுதியில் அமைந்துள்ளதால் பிரதான சாலையை இணைக்கும் வகையில், வெலிங்டன் வாய்க்காலின் மேல் சிறுபாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 32 ஆண்டுகளாக தனிப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகளுக்காக போராடும் அத்திப்பட்டி பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை