உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காட்சி பொருளானது முருங்கை நர்சரி நிழல்வலை கூடாரம்

காட்சி பொருளானது முருங்கை நர்சரி நிழல்வலை கூடாரம்

நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த கொசப்பள்ளம் ஊராட்சி, பெரியகொசப்பள்ளத்தில் கடந்தாண்டு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கடந்தாண்டு முருங்கை நர்சரி அமைக்க 4 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிழல்வலை அமைக்கப்பட்டது.ஆனால் ஓரிரு மாதங்கள் மட்டுமே முருங்கை நாற்று உற்பத்தி செய்த நிலையில், தற்போது, பணிகள் துவங்காமல் நாற்றங்கால் நிழல்வலை பராமரிப்பின்றி பாழாகிறது. எனவே, ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு, முருங்கை நாற்றங்கால் அமைக்கும் பணியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை