உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புளியமரம் தீப்பிடித்து விழுந்தது

புளியமரம் தீப்பிடித்து விழுந்தது

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த வானமாதேவி கடலுார் - பாலுார் சாலையை ஒட்டி 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் இருந்தது.நேற்று இரவு 7 மணியளவில் திடீரென மர்மான முறையில் அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையிலான வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.இதற்கிடையே மரத்தின் பெரிய கிளை சாலையில் விழுந்ததால் 7 மணி முதல் 7.30 வரை போக்குவரத்து பாதித்தது.தீயணைப்பு வீரர்கள் சாலையில் கிடந்த கிளையை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் மரம் எப்படி தீப்பிடித்தது என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை