உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாடலீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி 

பாடலீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி 

கடலுார், : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.கடலுார் திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி அம்மன் சமேத பாடலீஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் கடந்த 14ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. சித்ரா பவுர்ணமியான நேற்று, கோவில் சிவகர தீரத்த குளத்தில், மனோன்மணி அம்பிகை அம்மன் சமேத சந்திரசேகர சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு, சந்திரசேகரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை சாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ