உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹார்டுவேர்ஸ் கடையில் காப்பர் ஒயர்கள் திருட்டு

ஹார்டுவேர்ஸ் கடையில் காப்பர் ஒயர்கள் திருட்டு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் ஹார்டுவேர்ஸ் கடையில் புகுந்து, ரூ. 25 ஆயிரம் மதிப்பள்ள காப்பர் ஒயர்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லிக்குப்பத்தை சேர்ந்த நசீர் அகமது என்பவர், கீழ்பட்டாம்பாக்கம் மெயின் ரோட்டில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறந்தபோது, கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடையின் பின்புறம் தடுப்புக்காக அமைத்திருந்த தகரத்தை பிரித்து திருடர்கள் உள்ளே சென்று கடையில் இருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர்களை திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து நெல்லிக்குப்பம போலீசில் நசீர் அகமது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் முஸ்லீம் கருமாரத் தெரு, சாமிநாதன் தெருக்களில் உள்ள பழைய இரும்பு கடையிலும் இதுபோன்று திருட்டு நடந்துள்ளதால், வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை