உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் உண்டியல் திருட்டு

கோவில் உண்டியல் திருட்டு

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் வான்பாக்கத்தில் பாஸ்கர ஈஸ்வரர் கோவில், அதன் அருகே லஷ்மிநாராயணன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பத்ரி நாராயணன் பட்டாச்சாரியார் வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது இரண்டு கோவில்களின் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பாஸ்கர ஈஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து 8 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ