உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையில் படுத்த வாலிபரால் பரபரப்பு

சாலையில் படுத்த வாலிபரால் பரபரப்பு

கடலுார் : கடலுார் அண்ணா பாலத்தில், வாலிபர் திடீரென சாலையின் குறுக்கே படுத்ததால், போக்குவரத்து பாதித்து, பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் திருப்பாதிரிபுலியூர் அண்ணா மேம்பாலம், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதும் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில் இந்த பாலத்தில் நடந்து சென்ற 20 வயதுடைய வாலிபர், திடீரென சாலையில் படுத்துக்கொண்டார். இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து வாகனங்களை சாலையில் நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். சாலையில் படுத்திருந்த வாலிபரை அப்புறப்படுத்தி, அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர், மனவளர்ச்சி குன்றியவர் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் அந்த வாலிபரை கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ