உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் ஆடிப்பூர திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை, இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. 6ம் தேதி தேர் திருவிழா, 7ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.நேற்று கலை 5:30 மணியளவில் விருத்தாம்பிகை, விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணஉற்சவம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை