உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எனதிரிமங்கலம் பள்ளியில் திருக்குறள் விழா

எனதிரிமங்கலம் பள்ளியில் திருக்குறள் விழா

கடலுார்: பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் திருக்குறள் விழா மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கோமதி தலைமை தாங்கினார். ஆசிரியர் சிவகாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் உலகத் திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி, பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசினார். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை ஆசிரியர்கள் சரண்யா, கவுரி ஒருங்கிணைந்தனர். செயலாளர் நடராஜன் வாழ்த்தி பேசினார். வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஆசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி