உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புகையிலை பொருள் விற்றவர் கைது

புகையிலை பொருள் விற்றவர் கைது

பண்ருட்டி : பண்ருட்டி அருகே புகையிலைப் பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த கொரத்தி ஊராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையிலான போலீசார் கொரத்தி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று தீவிர சோதனை நடத்தினர். கொரத்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கேசவன்,61, என்பவரது பெட்டிக்கடையில் 225 பாக்கெட்டுகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கேசவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை