உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு

புவனகிரி: புவனகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.புவனகிரி வட்டாரத்தில் உள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பு, இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது.வட்டார கல்வி அலுவலர் செல்வி, பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் நல்லமுத்து பயற்சி அளித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருள்சங்கு, ஆசிரியர் பயிற்றுனர்கள் சக்திவேல், மதினா, கீதா மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.இந்த பயிற்சி வகுப்பில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி