உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் அருங்காட்சியகத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி

கடலுார் அருங்காட்சியகத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி

கடலுார் : கடலுார் அருங்காட்சியகத்தில், அரசு கல்லுாரி வரலாற்று துறை மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம் நடக்கிறது.கடலுார் அரசு அருங்காட்சியகத்தில், விழுப்புரம் அரசு கல்லுாரி மற்றும் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லுாரி எம்.ஏ., வரலாறு இறுதியாண்டு மாணவர்களுக்கு 15 நாட்கள் கோடைக்கால பயிற்சி முகாம் நடந்து வருகிறது. கடந்த 10ம் தேதி துவங்கிய முகாமில், அருங்காட்சியகம் செயல்பாடு குறித்தும், பழங்கால பொருட்கள் பராமரிப்பு, ஓலைச்சுவடி பராமரிப்பு, மரச்சிற்பங்கள் ஆய்வு செய்து பராமரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.இதில், அருங்காட்சியக வளாகத்தில் உள்ள சிலைகளை மாணவர்கள் துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். விழுப்புரம் வரலாற்று துறை பேராசிரியர் ஸ்ரீதர் தலைமையில் 25 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு, பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ