உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் சோழவல்லியில், வேளாண் துறை சார்பில் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.கடலுார் விதை சான்று அலுவலர் அனுசுயா, அண்ணாகிராமம் வேளாண்மை அலுவலர் விஜய் ஆகியோர் பயிற்சி அளித்தனர். தரமான விதைகள் தேர்வு செய்வது, விதை பண்ணை அமைத்தல் பற்றி பயிற்சி அளித்தனர். உதவி வேளாண்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன், விவசாயிகள் மாணிக்கம், சுரேஷ், பிரசாத் உட்பட ஒரு சில விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.பயிற்சி நடந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு முறையாக தகவல் கொடுக்காததால் குறைந்தளவு விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ