உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டிரான்ஸ்பார்மர் அமைப்பு

டிரான்ஸ்பார்மர் அமைப்பு

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சியில் மின்துறை சார்பில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி பகுதியில் நீண்ட காலமாக மின் குறைபாடு இருந்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் கூறிவந்தனர். இந்நிலையில் குமராட்சி வடக்கு தெருவில் குறைந்த மின் அழுத்த குறைபாட்டை சரி செய்யும் வகையில், 11 கே.வி., திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. ரூ. 6.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரை குமராட்சி ஒன்றிய சேர்மன் பூங்குழலி பாண்டியன் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில மின்துறை உதவி செயற்பொறியாளர் சந்திரா பானு, உதவி மின் பொறியாளர் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ