உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.என்.பாளையத்தில் காசநோய் பரிசோதனை முகாம்

சி.என்.பாளையத்தில் காசநோய் பரிசோதனை முகாம்

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், மாவட்ட காசநோய் மையமும் இணைந்து காசநோய் பரிசோதனை முகாமை நடத்தினர்.முகாமில் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் திரிபுரசுந்தரி தலைமையில் மாவட்ட காசநோய் தடுப்பு மைய மருத்துவகுழுவினர் பொதுமக்களுக்கு காசநோய் உள்ளதா என பரிசோதனை செய்தனர்.முகாமில் டிஜிட்டல் எக்ஸ்ரே,ஆய்வக பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் உடல் பலகீனமாக உள்ள 19 பேருக்கு சிப்காட் டி.எப்.இ., பார்மா நிறுவனமும் மாவட்ட காசநோய் மையமும் இணைந்து ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர். முகாமில் 30 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை