உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆற்றுமணல் திருடிய இரண்டு பேர் கைது

ஆற்றுமணல் திருடிய இரண்டு பேர் கைது

திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த கொரக்கவாடியில், வெள்ளாற்றில் மணல் திருடிய இரண்டு பேரை வாகனத்துடன் சிறைப்பிடித்த பொதுமக்கள், போலீசில் ஒப்படைத்தனர்.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி கிராமம் அருகே வெள்ளாற்றில் மர்மநபர்கள் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டுவந்தனர். இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணியளவில், சிலர் பொலிரோ பிக்அப் வாகனத்தில் வெள்ளாற்றில் மணல் அள்ளுவது தெரிந்தது. உடன் பொதுமக்கள் அந்த வாகனத்தை சிறை பிடித்தனர். தகவலறிந்த ராமநத்தம் போலீசார் நேரில் சென்று, மணல்அள்ளிய வாகனத்தை பறிமுதல் செய்தனர். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து, மணல் திருட்டில் ஈடுபட்ட வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்,50, முருகேசன்,48, ஆகியோரை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை