| ADDED : ஜூன் 09, 2024 02:57 AM
நெய்வேலி, : நெய்வேலியில் கொத்தனாரை தாக்கிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 21 ஐ சேர்ந்தவர் பாண்டியன். நேற்று முன்தினம், இவரது மகன் கிருபாகரன் என்பவர், தனது மனைவி குழந்தையுடன் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வட்டம் 21 பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் பிரசாத் 21, வட்டம் 11 பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் குணசீலன் 24; இருவரும், கிருபாகரனிடம் தகராறு செய்தனர்.இதனை தட்டிகேட்ட, கிருபாகரன் தந்தை பாண்டியனை சரமாரியாக தாக்கினர். காயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிந்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், டெல்டா சிறப்பு எஸ். எஸ்.ஐ.,க்கள், நேற்று வட்டம் 20 ல் உள்ள என்.எல்.சி., காலி குடியிருப்பில் பதுங்கியிருநத பிரசாத், குணசீலன் இருவரையும் கைது செய்தனர்.இருவரும் தப்பியோடியபோது காயமடைந்து, கை, கால் முறிவு ஏற்பட்டது. இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து போலீசார் சிறையில் அடைத்தனர்.