உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காற்றில் விழுந்த மரத்தை அகற்றிய இருவர் படுகாயம்

காற்றில் விழுந்த மரத்தை அகற்றிய இருவர் படுகாயம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் காற்றில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றிய இருவர் படுகாயமடைந்தனர்.விருத்தாசலத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்று வீசியது. அதில், ஜெயில் தெருவில், பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே இருந்த 70 ஆண்டு பழமையான அரச மரம், அருகில் இருந்த ரேஷன் கடை மற்றும் மின்கம்பம் மீது விழுந்தது.இதனால், ஜெயில் தெரு, கம்பர் தெரு உட்பட கடைவீதியின் ஒரு பகுதி இருளில் மூழ்கின. இரவு நேரத்தில் மரத்தை அகற்ற முடியாததால், 10 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டனர்.நேற்று காலை 6:00 மணிக்கு சேர்மன் சங்கவி முருகதாஸ், துணை சேர்மன் ராணி தண்டபாணி முன்னிலையில் சீரமைப்பு பணி துவங்கியது. நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் பூந்தோட்டம் மணிமுத்து,43; விசலுார் சுரேஷ்,36; ஆகியோர் ஜே.சி.பி., பக்கெட்டில் நின்று மரக்கிளைகளை வெட்டியபோது எதிர்பாராத விதமாக இருவரும் மரக்கிளையில் அடிபட்டனர்.அதில், இருவருக்கும் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடன் இருவரையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் ஆபத்தான நிலையில் இருந்த மணிமுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ