| ADDED : ஜூலை 29, 2024 05:21 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த எருமனுார் வி.இ.டி., பள்ளியில், ஆண்டுவிழா உள்ளிட்ட எழுவகை பெருவிழா நடந்தது. விழாவிற்கு, கல்வி குழும தலைவர் பத்மாவதி சக்திவேல் தலைமை தாங்கினார்.பொருளாளர் மோகனா கொளஞ்சிநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் விஜயலக்ஷ்மி சுரேஷ்குமார் வரவேற்றார்.முற்பகல் நடந்த நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து, மாணவர்கள் ஒழுக்கம், பெற்றோர்களை மதித்தல், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார்.நண்பகல் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பிற்பகல் நிகழ்ச்சியில், சி.இ.ஓ., அறிவழகன் கலந்து கொண்டு, உழைப்பு, காலத்தின் முக்கியம், போட்டித் தேர்வுகளுக்கு படித்தல் குறித்து பேசினார். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் எடில்பர்ட் பெலிக்ஸ் நன்றி கூறினார்.