பண் ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து, தினமும் காலை, மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது. அதையொட்டி, நேற்று 4:30 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர் அம்பாள் பெரியநாயகி, உற்சவர் திரிபுர சம்ஹாரமூர்த்திக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.காலை 6:30 மணிக்கு உற்சவர் திரிபுர சம்ஹாரமூர்த்தி, தேரில் எழுந்தருளினார். அதையடுத்து, 7:00 மணிக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கரகோஷம் முழுங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர்.முன்னாள் அமைச்சர்கள் சம்பத், தாமோதரன், முன்னாள் துணை சேர்மன் சம்பந்தம், தி.மு.க., நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், துணை சேர்மன் சிவா, தி.மு.க.,கவுன்சிலர்கள் ஆனந்திசரவணன், சீனுவாசன், முன்னாள் கவுன்சிலர் தணிகைசெல்வம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயாளர் வீரப்பன், மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் ராஜேந்திரன், எஸ்.வி.ஜீவல்லர்ஸ் வைரக்கண்ணு,அருள், வள்ளிவிலாஸ் சரவணன், எஸ்.டி.பி.மளிகை வீரப்பன், மீனா ஜீவல்லர்ஸ் தேவராஜ், ஐஸ்வர்யா ேஹாம் நீட்ஸ் ராஜ்மோகன், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இரவு 7:00 மணிக்கு உறசவர் திரிபுர சம்ஹாரமூர்த்தி தேரிலும், திருவதிகை சரநாராயண பெருமாள் கருட வாகனத்தில் வீரட்டானேஸ்வரர் கோவில் முன்பும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு, ஐதீக முறைப்படி தாரகாட்சகன், கமலாட்சன், வித்துன்மாலி ஆகிய 3 அசுரர்களை திரிபுர சம்ஹாரமூர்த்தி சாமிகள் சிரிப்பால் முப்புரமெரித்த காட்சி நடந்தது.