உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேணுகோபாலசாமி கோவில் திருப்பணி பாலாலயம்

வேணுகோபாலசாமி கோவில் திருப்பணி பாலாலயம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபாலசாமி கோவில் திருப்பணிக்கான பாலாலயம் பூஜைகள் நடந்தது.நெல்லிக்குப்பம் காந்தி வீதியில் பழமையான பாமா ருக்குமணி சமேத வேணுகோபாலசாமி கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவிலில் மூலவர் சிலை அத்தி மரத்தாலானது சிறப்பாகும். இக்கோவில் கடைசியாக 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதையடுத்து, 22 ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. அறநிலையத்துறை சார்பில் திருப்பணிக்கு 15 லட்சம் ரூபாய் ஒதுக்கி, டெண்டர் விடப்பட்டது. ஆனாலும், திருப்பணி துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது. அதையடுத்து, அரசு அனுமதியுடன் திருப்பணிக்கான பாலாலயம் நடந்தது. பூஜைகளை, ரமேஷ் பட்டாச்சாரியார் தலைமையில் செய்தனர். செயல் அலுவலர் தேவகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை