உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராம வரைபட மதிப்பீடு; மாணவர்கள் விளக்கம்

கிராம வரைபட மதிப்பீடு; மாணவர்கள் விளக்கம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த பரவளூரில் வேளாண் மாணவர்களின் கிராமப்புற வரைபட மதிப்பீடு பயிற்சி நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை எம்.எஸ்.சாமிநாதன் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.அவர்கள், விருத்தாசலம் அடுத்த பரவளூர் விவசாயிகளுக்கு, கிராம வரைபட மதிப்பீடு பயிற்சி அளித்தனர். அதில், பயிர்கால அட்டவணை, சமூக வரைபடம், பயிர் பரப்பு, மக்கள் தொகை உட்பட கிராமம் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.மேலும், மஞ்சள் ஒட்டு பொறி, இனக்கவர் பொறி, காளான் வளர்ப்பு, கிசான் கிரெடிட் கார்டு திட்டம், இலை வண்ண அட்டை பயன்பாடு, பயன்கள் குறித்து வேளாண் மாணவர்கள் சுபல், சுடலையாண்டி, சாமிநாதன், திருமாவளவன், வேந்தன், விஜயராகவன், விக்ரம், விஷ்ணு சங்கர், விஷ்ணு பாண்டி ஆகியோர்விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ