உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.கே.டி., சாலை விரைந்து முடிக்க சபா ராஜேந்திரன் வலியுறுத்தல்

வி.கே.டி., சாலை விரைந்து முடிக்க சபா ராஜேந்திரன் வலியுறுத்தல்

நெய்வேலி: நெய்வேலி வழியாக செல்லும் வி.கே.டி.,சாலை பணியை, விரைந்த முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சட்டசபையில், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தனர்.சட்டசபையில் நேற்று, சபா ராஜேந்திரன் பேசுகையில், எனது நெய்வேலி தொகுதி வழியாக செல்லும் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி, கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணி, 2017ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இதுவரை பணி முடிக்கவில்லை.இந்த சாலையில் நெய்வேலி ஆர்ச்கேட் உட்பட பல பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகிறது. சட்டசபையில் இது தொடர்பாக, பல முறை கவன ஈர்ப்பு கொடுத்தும் தொடர்ந்து பணிகள் நடக்காமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தொடர்ந்து பணிகள் நடந்து, விரைந்த முடிக்க ஆவண செய்ய வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.பதிலளித்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு பேசுகையில், வி.கே.டி., சாலை பணி மூன்று கட்டமாக நடந்து வருகிறது. இதில், விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையில், டெண்டர் எடுத்த ரிலையன்ஸ் நிறுவனத்தார் மிக மிக தாமதமாக பணிகளை செய்து வந்தனர். இது தொடர்பாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து இரண்டு முறை மனு கொடுத்துள்ளோம். அதையடுத்து, ரிலையன்ஸ் நிறுவனத்தை அழைத்து, நீங்கள் மிகவும் தாமதமாக பணிகளை செய்கிறீர்கள் என கூறி, டெர்மினேஷன் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு கொடுத்த காலக்கெடு 2025ம் ஆண்டு முடிகிறது.எனவே, அதற்கு பிறகுதான் மத்திய அரசு புதிய ஒப்பந்ததாரர்களை அழைக்க முடியும். எனவே, புதிய ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசி டெண்டர் விட்டால்தான் அந்த பணிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை