உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காவல் நிலைய வீடியோ பதிவிட்டவருக்கு எச்சரிக்கை

காவல் நிலைய வீடியோ பதிவிட்டவருக்கு எச்சரிக்கை

கடலுார்: கடலுார் காவல் நிலைய வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அப்போது, அவர் காவல் நிலையத்தை வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக கடலுார், டி.புதுப்பாளையம் அரிகிருஷ்ணன், 20; என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ரீல்ஸ் வெளியிட்டதை ஒப்புக் கொண்டார். இவரை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி