உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சிகளில் விளையாட்டு திடல்களை காணோம்

ஊராட்சிகளில் விளையாட்டு திடல்களை காணோம்

கடலுார் மாவட்ட கடைக்கோடியில் உள்ள மங்களூர் ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள் உள்ளன. 2020ம் ஆண்டு புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்பட்டனர். சில மாதங்களிலேயே ஊராட்சிகள் தோறும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் கோவில்மானியம், ஓடை புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு உட்பட பல்வேறு இடங்களில் புதிய ஊராட்சி நிர்வாகத்தினர் அவசர கோலத்தில் விளையாட்டு மைதானங்களை அமைத்தனர்.இதற்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா 50ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடமைக்கு அமைக்கப்பட்ட அந்த விளையாட்டு மைதானங்கள் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. சில ஊர்களில் அதே இடத்தில் குடிநீர் தொட்டி போன்ற வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.கிராமத்து இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு உருவாக்கிய திட்டத்தை உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுத்தாமல் கண்துடைப்பு வேலை செய்து நிதியை விரயம் செய்தனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கிராமங்கள் தோறும் விளையாட்டு மைதானங்களை, செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி