உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் கடைகளால் மக்கள் பாதிப்பு மாவட்ட நிர்வாகம் கருணை காட்டுமா

டாஸ்மாக் கடைகளால் மக்கள் பாதிப்பு மாவட்ட நிர்வாகம் கருணை காட்டுமா

விருத்தாசலம் நகர நெடுஞ்சாலையில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளுக்கு வரும் போதை ஆசாமிகளால் போக்குவரத்து பாதிப்பதுடன், பொது மக்களுக்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.விருத்தாசலம் கல்வி மாவட்ட தலைமையிடமாக உள்ளது. இங்கு கோட்ட அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், புகழ்பெற்ற கோவில்கள், தியேட்டர்கள், பெரு வணிக நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அரசு பொது மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.இங்கு ரயில்வே ஜங்ஷன் முகப்பு, பஸ் நிலையம், பாலக்கரை இறக்கம், ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம், சிதம்பரம் பிரிவு ரோடு, ஏனாதிமேடு, குப்பநத்தம் புதிய புறவழிச்சாலை என 9 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மேலும், நான்கு தனியார் மதுபான கூடங்களும் உள்ளன.இதில், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., முதல் பாலக்கரை வரையும், மறுமுனையில் தென்கோட்டை வீதியில் இருந்து மணவாளநல்லுார் ஊராட்சி எல்லை வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, வாகனங்கள் நிறுத்த வசதியாக பிளாட்பார்ம் போடப்பட்டுள்ளது.சாலை அகலப்படுத்தப்பட்டதால், வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்கின்றன. இதனால் சாலையை கடக்க முடியாமல் பாதசாரிகள் மிகுந்த சிரமமடைகின்றனர். இந்நிலையில், பிரதான நெடுஞ்சாலையில் சிதம்பரம் பிரிவு ரோடு, பாலக்கரை, ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம் பகுதிகளில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளால் நெரிசல் ஏற்படுகிறது.பகல் 12:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை மது அருந்திவிட்டு வாகனங்களில் செல்லும் போதை ஆசாமிகளால் பொது மக்கள் மிகுந்த சிரமமடைகின்றனர். அதுபோல், மாணவிகள், பெண்கள் நடந்து செல்லும்போது கிண்டல் அடிப்பது, விசில் அடிப்பது போன்ற அறுவறுக்கத்தக்க செயல்கள் நடக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில், நகரில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபான விடுதிகள் மூடப்பட்டன. அப்போது, குப்பநத்தம் புதிய புறவழிச்சாலையோர டாஸ்மாக் கடை மட்டும் இயங்கியது. இதனால் நகரில் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் ஏதுமின்றி காணப்பட்டது.ஆனால், தமிழக அரசு மேல்முறையீடு செய்து, டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்ததால், பொது மக்கள் தினசரி பிரச்னையை சந்திக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, விருத்தாசலம் நகரில் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை