உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிமென்ட் லாரி மோதி பெண் பலி

சிமென்ட் லாரி மோதி பெண் பலி

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் சிமென்ட் லோடு லாரி மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணாடம், தெற்குரத வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி அன்புரோஜா, 43. மனநிலை பாதித்தவர். நேற்று காலை 6:00 மணியளவில் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பேரூராட்சி அலுவலகம் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே வந்த டி.என். 47 - பி.சி.7472 பதிவெண் கொண்ட சிமென்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரி மோதியது. படுகாயமடைந்த அன்புரோஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை