புதுச்சத்திரத்தில் இளம்பெண் தற்கொலை
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் ரமணி, 56; இவரது மகள் ரம்யா 29; இவருக்கும் குள்ளஞ்சாவடியை சேர்ந்தசிலம்பரசன் என்பவருக்கும், கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே மனநலம்பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த ரம்யா தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 23 ம் தேதி ரம்யா தனது உடலில், மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். படுகாயமடைந்தவரைஅருகிலிருந்தவர்கள் மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், நேற்று இறந்தார்.புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.