உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக்கில் ரகளை வாலிபர் கைது

டாஸ்மாக்கில் ரகளை வாலிபர் கைது

விருத்தாசலம், : விருத்தாசலம் டாஸ்மாக்கில் ஓசி சரக்கு கேட்டு பீர் பாட்டில்களை உடைத்து சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி எதிர்புறம் உள்ள டாஸ்மாக் கடையில், நேற்று வாலிபர் ஒருவர் ஓசியில் குவாட்டர் கேட்டுள்ளார். தரமறுத்த டாஸ்மாக் பணியாளரை ஆபாசமாக திட்டி, மிரட்டல் விடுத்தார். மேலும், அங்கு ஐந்து சாக்கு மூட்டைகளில் கட்டி வைத்திருந்த 1,000 பீர் பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினார்.மேற்பார்வையாளர் அச்சுதன், 55, புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப் பதிந்து, விருத்தாசலம் அடுத்த பூந்தோட்டம் வேலாயுதம் மகன் பரணி, 23: என்பவரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ