உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாய் கடித்து 10 பேர் காயம் மருத்துவமனையில் அட்மிட்

நாய் கடித்து 10 பேர் காயம் மருத்துவமனையில் அட்மிட்

காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் கடந்த இரண்டு நாட்களாக 10க்கும் மேற்பட்டோரை நாய் கடித்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.காட்டுமன்னார்கோவில் பகுதியில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நாய்கள் கடித்து பலர் காயமடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களில் ஓமாம்புலியூர் சாலையில், ஜெயராமன் நகர் தலைமை ஆசிரியர் கலைராஜ், 48; என்பவரை நாய் கடித்தது.இதேப் போன்று, கருணாகர நல்லுார் பிரவீன்,25; கீழராதாம்பூர் ராமச்சந்திரன், 48; நாட்டார்மங்கலம் அரவிந்த்ராஜ்,35; கண்டமங்கலம் சுரேஷ், 45; பரணி, 40; உடையார்பாளையம் செல்வம், 50; உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோரை நாய் கடித்தது. இவர்கள் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். நாய்கள் சுற்றித் திரிவதை தடுக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை