உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மங்களூரில் குப்பை அள்ள 11 பேட்டரி வண்டிகள்

 மங்களூரில் குப்பை அள்ள 11 பேட்டரி வண்டிகள்

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றியத்தில் குப்பைகளை அள்ளுவதற்கு புதிய பேட்டரி வண்டிகள் வழங்கப்பட்டன. மங்களூர் ஒன்றியத்தில் குப்பைகளை அள்ளுவதற்கு தலா ரூ., 2.30 லட்சம் மதிப்பில், 11 பேட்டரி வண்டிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி நடந்தது. மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பி.டி.ஓ., சண்முக சிகாமணி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் குணசேகர் வரவேற்றார். நிர்வாக மேலாளர்கள் பாலக்கிருஷ்ணன், ஜெயக்குமாரி உட்பட பலர் பங்கேற்றனர். அதில், சிறுபாக்கம், ராமநத்தம், தொழுதுார், ஒரங்கூர், மங்களூர், போத்திரமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில், குப்பைகளை அள்ளுவதற்கு பேட்டரி வண்டிகள் வழங்கப்பட்டன. மேலும், ஊராட்சியில் தெருக்கள் தோறும் குப்பைகளை அகற்றி, துாய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை