மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத பிணம்
10-Apr-2025
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே கல்லூரி மாணவரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார் முள்ளிப்பள்ளத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் ஆகாஷ், 20; கல்லூரி மாணவர். நேற்று இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன், சாமியார்பேட்டை கடற்கரைக்கு சென்று திரும்பி வந்தார். புதுச்சத்திரம் அடுத்த வாண்டையாம்பள்ளம் பகுதிக்கு வந்த போது, அந்த பகுதியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் ஆகாஷை வழிமறித்து தாக்கி, மொபைல் போனை பறித்து சென்றனர். இது குறித்து ஆகாஷ் கொடுத்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வாண்டையாம்பள்ளம் பிரேம்குமார், 26; கவிராஜன், 32; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
10-Apr-2025