உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

குள்ளஞ்சாவடி: மதுபாட்டில் விற்ற மூதாட்டி உட்பட, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர் குள்ளஞ்சாவடி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார், நேற்று காலை சுப்ரமணியபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சில வீடுகளில் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மதுபாட்டில் விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது. மதுபாட்டில் விற்ற சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்த வள்ளியம்மை, 80, மற்றும், சின்ராசு, 34, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிந்த போலீசார், 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை