மேலும் செய்திகள்
கூழாங்கற்கள் கடத்தல் லாரி டிரைவர் கைது
15-Apr-2025
விருத்தாசலம் : லாரியில் கூழாங்கற்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, தேவங்குடி சாலையில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து டிரைவர் இருளக்குறிச்சி சேகர் மகன் விஜயகுமார், 20, கிளீனர் குருவன்குப்பம் மணிபாலன் மகன் கார்த்திகேயன், 19, ஆகியோரை கைது செய்தனர்.
15-Apr-2025