மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்பனை 3 பேர் மீது வழக்கு
05-Aug-2025
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி, ஆழங்காத்தான் பகுதியில் திருட்டு தனமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், குமராட்சி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், அதே பகுதியை சேர்ந்த செல்லையன் மகன் ஆசைத்தம்பி, 29; முருகேசன், 55; ஆகியோர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ஆமைதம்பி, முருகேசனை கைது செய்து, 50 மதுபாட்டில்கள், மொபட்டை பறிமுதல் செய்தனர்.
05-Aug-2025