உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பட்டாசு வெடித்ததில் மோதல் 2 பேர் காயம்; 8 பேர் மீது வழக்கு

பட்டாசு வெடித்ததில் மோதல் 2 பேர் காயம்; 8 பேர் மீது வழக்கு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், இரண்டு பேர் படுகாயமடைந்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன், 50; இவரது, மகன் செந்தமிழ்ச்செல்வன். இவர், தனது நண்பர்களுடன் கடந்த 20ம் தேதி முருகன் கோவில் அருகே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முருகன், ஏன் இங்கு பட்டாசு வெடிக்கிறீர்கள் என கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில், செந்தமிழ்ச்செல்வன், சந்திரா இருவரும் படுகாயமடைந்து, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து, ஜெயராமன், சந்திரா இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார், முருகன், பரமானந்தம், மதன்ராஜ், பிரித்திவிராஜ், சிலம்பரசன், சூர்யா, தமிழ்ச்செல்வன், செந்தமிழ்ச்செல்வன் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !