உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது

 ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அருகே கெடிலம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட, 3 பேரை கைது செய்த போலீசார், மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கெடிலம் ஆற்றிலிருந்து மாட்டுவண்டியில் மணல் திருடி வந்த டி.புதுார் கிராமத்தைச் சேர்ந்த லட்சகுரு,48; ஹரிஹரன்,23; ஜெயமுருகன்,46; ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மூன்று மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை