உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூரில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் போஸ்ட்மேன் உட்பட நால்வர் கைது

வேப்பூரில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் போஸ்ட்மேன் உட்பட நால்வர் கைது

விருத்தாசலம், : வேப்பூரில் கஞ்சா கடத்தி வந்த போஸ்ட்மேன் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர் பகுதிக்கு, ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த jகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி., சவுமியா, இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.வேப்பூர் கூட்ரோட்டில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரங்கூர் நடுத்தெரு, திருஞானசம்பந்தம் மகன் மணிகண்டன், 32, என்பவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரித்ததில், கஞ்சா கடத்தலுக்கு, தொழுதுார் மேற்கு தெரு சக்திவேல், 25, ராமநத்தம் வ.உ.சி., நகர் கார்த்திக், 24, புலிகரம்பலுார் மாரியம்மன் கோவில் தெரு மணிவண்ணன், 23, ஆகியோர் பண உதவி செய்தது தெரிந்தது.நால்வரையும் கைது செய்து விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில், சக்திவேல் வெங்கனுார் தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக பணிபுரிவது குறிப்பிடத் தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி