உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மது பாட்டில் விற்ற 3 பேர் கைது

மது பாட்டில் விற்ற 3 பேர் கைது

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பொட்டா மற்றும் போலீசார் நேற்று மங்கலம்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, விருத்தாசலம் தாஷ்கண்ட் குமார், 40; மங்கலம்பேட்டை ஜெயக்குமார், 55; கோ.பவழங்குடி பரசுராமன், 29, ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது.உடன், 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், 34 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பெட்ரோல் விற்றவர் கைது

கோ.பவழங்குடி நடுக்குப்பம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அதேபகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார், 49, என்பவர் தனது பெட்டிக்கடையில், பெட்ரோல் விற்பனை செய்தது தெரியவந்தது.இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மகேஷ்குமாரை கைது செய்தனர். மேலும், கடையில் இருந்த 4 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ