உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டையில், கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, கஞ்சா விற்ற பரங்கிப்பேட்டை. கொடி மரத்தெரு ஆகாஷ், 23; சின்னுார் தெற்கு திலகவேந்தன், 30; தெத்துக்கடைத் தெரு மணிகண்டன், 35; கோட்டாத்தங்கரை தெரு அன்வர் பாஷா, 28; ஆகிய நான்கு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 100 கிராமம் கஞ்சா, பல்சர் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி