உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வடலுாரில் லாட்டரி விற்ற 4 பேர் கைது

 வடலுாரில் லாட்டரி விற்ற 4 பேர் கைது

வடலுார்: வடலுாரில் லாட்டரி விற்ற, 4 பேரை போலீசார் கைது செய்தனர். வடலுார் சப்இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம், வடலுார் சபை பிள்ளையார் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஸ்கூட்டர்களை நிறுத்தி விசாரித்த போது, அதில் பயணித்த நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதும், கூகுள்பே மூலம் ரூ.,1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தது தெரிந்தது. லாட்டரி விற்ற கடலுார் புதுநகர் சான்றோர்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன், 54; அதே பகுதி, சுந்தரம் சந்தை சேர்ந்த மந்திரி (எ) ராஜா, 65; குள்ளஞ்சாவடியை சேர்ந்த சேகர், 52; கடலுார் புதுநகர் சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்த முரளி, 38; ஆகிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஸ்கூட்டர், 3 மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்