உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றம்

 வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டிலிருந்து வினாடிக்கு, 5 ஆயிரம் கன அடி உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர். கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய 21 செ.மீ., மழை பெய்தது. வெள்ளாறு வடது கரையோர கிராமங்களான பெரியகுப்பம், சின்னகுப்பம், வீரமுடையாநத்தம், அகரஆலம்பாடி, பு.ஆதனுார், பெருவரப்பூர், சிறுவரப்பூர், தென்கரையோர கிராமங்களான, மழவராயநல்லுார், முடிகண்டநல்லுார், சாந்திநகர், காவலங்குடி உள்ளிட்ட வயல்வெளியிலிருந்து வெளியேறும் மழை நீர் வெள்ளாறு அணைக்கட்டிற்கு வந்தடைகிறது. வயல்களில் உள்ள மழை உபரி நீர், வெள்ளாற்றில் வந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களா க தேக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை, 7:00 மணியளவில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில், 4 ஷட்டர்களை திறந்து வினாடிக்கு, 5 ஆயிரம் கன அடி வரை உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர். அணைக்கட்டிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது புவனகிரி, பரங்கிப்பேட்டை வழியாக கடலுக்கு சென்றடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை