உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் உழவர் சந்தையில் 55 டன் காய்கறிகள் விற்பனை

கடலுார் உழவர் சந்தையில் 55 டன் காய்கறிகள் விற்பனை

கடலுார்: கடலுார் உழவர் சந்தையில் 55 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனையானது. கடலுார் உழவர் சந்தையில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு, கடலுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்கின்றனர். தினமும் 1,500 முதல், 2,000 பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கிச் செல்கின்றனர். தினமும் 20 டன் காய்கறிகள், 5 டன் பழங்கள் விற்பனையாகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு பழங்கள், காய்கறிகள் பயன் பாட்டிற்கான தேவை அதிகரித்தது. இதன் காரணமாக வழக்கத்தை விட உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. வாழைத்தார் 150 ரூபாய் முதல், 300 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த 2 நாட்களில் 55 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையானது. விற்பனை தொகை 23 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் ஆகும். 7,000 நுகர்வோர்கள் வந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை