உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் கோர்ட் வளாகத்தில் 76வது குடியரசு தின விழா

கடலுார் கோர்ட் வளாகத்தில் 76வது குடியரசு தின விழா

கடலுார்; கடலுார் செசன்ஸ் கோர்ட் வளாகத்தில் 76வது குடியரசு தினவிழாவையொட்டி முதன்மை மாவட்ட நீதிபதி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.76வது குடியரசு தினவிழாவையொட்டி கடலுார் கோர்ட் வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிபதி சோபனா தேவி, மோட்டார் வாகன விபத்து நீதிபதி பிரகாஷ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நாகராஜன், முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி ராஜேஷ்கண்ணா், சார்பு நீதிபதிகள் நிஷா, லலிதா ராணி, முதன்மை உரிமையியல் நீதிபதி பத்மாவதி, மாஜிஸ்திரேட்டுக்கள் வனஜா, கவியரசன், முனிசீப்கள் மற்றும் பார் அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் செந்தில்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவி அமுதவல்லி, செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை